136 இன்னிங்ஸ் வரை ஆடிய தந்தை: 5 இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய ஜூனியர் சந்தர்பால்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டஜ்நரைன் (Tagenarine) சந்தர்பால் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 467 பந்துகளை எதிர்கொண்டு 207 ரன்களை பதிவு செய்திருந்தார் ஜூனியர் சந்தர்பால்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Yope12t