''முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்'' - இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார் பும்ரா.

பும்ரா, இந்திய அணிக்காக கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதன் பின்னர்முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5rchfiN