கார் விபத்தில் இருந்து தன் உயிரை காத்தவர்களை மருத்துவமனையில் சந்தித்த ரிஷப் பந்த்

டேராடூன்: கடந்த 30-ம் தேதி கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் ரிஷப் பந்த். இந்தச் சூழலில் விபத்தில் சிக்கிய தன்னை காத்தவர்களை மருத்துவமனைக்கு வரவழைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அண்மையில் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடைபெற்றது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/RaxqY4j