ஹாக்கி உலகக் கோப்பை 2023 போட்டிகளை நேரலையில் டிவி, ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடரி ஒடிசா மாநிலத்தில் நாள் துவங்க உள்ளது. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நேரலையில் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/67ioAyE