யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் | ஷபாலி வர்மா, சுவேதா அதிரடியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி

பினோனி: 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஷபாலி வர்மா, சுவேதா ஷெராவத் ஆகியோரது அதிரடியால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள்குவித்தது. தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஷபாலி வர்மா 34 பந்துகளில், 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 78 ரன்களும் சுவேதா ஷெராவத் 49 பந்தில், 10 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BLgwoDW