ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். வரும் 13-ம் தேதி இந்த தொடர் ஒடிசா மாநிலத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் இந்தியா இதில் பங்கேற்கிறது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dSc7aAU