
டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையேயான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்த, விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 72-வது சதமாகும்.
வங்கதேசத்திற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. ஒருநாள் தொடரை 2 போட்டிகளில் வென்று ஏற்கெனவே வங்கதேசம் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Em3KxMB