
புதுச்சேரி: இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்தத் தோல்வியில் இருந்து எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் குறித்த சில பாடங்களை இந்திய அணி கற்றிருக்கும். அதில் ஒன்று ஷ்ரேயஸ் ஐயர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்கிறார்.
எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்காக கட்டமைக்கப்பட்டு வரும் இந்திய அணியில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார். அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் போதெல்லாம் தனது திறன்களை வெளிப்படுத்தி வருகிறார். அதன் வெளிப்பாடுதான் நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்களில் அதிக ரன்களை எடுத்துள்ள பேட்ஸ்மேனாக அவர் இருக்க காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/gfJeS65