நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்

வெலிங்டன்: நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அவர் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

32 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2016 வாக்கில் அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. கடந்த 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/spgy6Dn