T20 WC அரையிறுதி | பந்தாடப்பட்ட இந்திய பவுலர்கள் - விக்கெட் இழப்பின்றி வென்று இறுதிக்கு இங்கிலாந்து முன்னேற்றம்

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பட்லர் என இருவரும் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை பந்தாடினர். இதனை இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவர் முதலே அந்த அணி செய்து வந்தது. இருவரும் இறுதி வரை தங்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பவுலிங் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகளை பட்லர் விளாசி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Xwlc3bp