T20 WC அலசல் | படுமோசமான ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங்: தென் ஆப்பிரிக்காவின் ‘மோசமான’ தினத்தில் பாகிஸ்தான் துவம்சம்!

சிட்னியில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் 2 அட்டவணையில் +1.117 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி எந்தவித இடையூறும் இல்லாமல் நெதர்லாந்தை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் தொடரில் இருந்து வெளியேறிவிடும். அப்படியல்லாமல் மழைக் குறுக்கீடு என்ற சூழலில் புள்ளிகள் பகிரும் நிலை ஏற்பட்டால் நிச்சயம் குரூப் பி-இல் இருந்து அரையிறுதிக்கான தகுதி மிகவும் போட்டி நிறைந்ததாக மாறவும் வாய்ப்புள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/b2xFckh