
சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். முக்கியமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான்நம் இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்திருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது பாகிஸ்தான்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி நேர்த்தியாக ரன்களை விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் 122 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/qThnolp