
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இதற்கு முன்னர் பெற்ற ஐசிசி வெற்றிகள் குறித்தும், உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் குறித்தும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
தோல்விகளின் போது முந்தைய தரமான வெற்றிகளுக்கான மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். இப்போதும் அது தான் நடந்து வருகிறது. அந்த வகையில்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வென்றுக் கொடுத்த டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகள் இப்போது நினைவலைகளில் வந்து செல்கிறது. இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் தோனியை புகழ்ந்துள்ளார் கம்பீர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/AMINUby