T20 WC | கோலி 'ஃபேக் ஃபீல்டிங்’ செய்தார்: வங்கதேச அணி குற்றச்சாட்டு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது இந்தியா. இந்த வெற்றி இந்திய அணிக்கு அவசியமான ஒன்று. இந்நிலையில், இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ஃபீல்டிங் தவறை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியுள்ளது வங்கதேச அணி.

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டது. அதனால் 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இருந்தும் 145 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/sZTFNPM