T20 WC | ட்விஸ்ட் கொடுத்த மழை - வங்கதேசத்தை போராடி வீழ்த்தியது இந்தியா

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி பேட் செய்தபோது குறுக்கிட்ட மழை காரணமாக ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதோடு அந்த மழைதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/cxAwUMV