T20 WC | கேட்ச் பிடித்ததில் குழப்பம்: பட்லரிடம் மன்னிப்புக் கோரிய வில்லியம்சன்; கொந்தளித்த ரசிகர்கள்

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்த கேட்ச் ஒன்று விவாதப் பொருளாக உள்ளது. அவர் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என தெரிந்ததும் பட்லரிடம் மன்னிப்பு கோரினார். ஆனாலும், ரசிகர்கள் அவரது செயலை விமர்சித்து வருகின்றனர்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அந்த அணி பேட் செய்தபோது ஆறாவது ஓவரை சான்ட்னர் வீசி இருந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து கேப்டன் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DyIeUPo