T20 WC | நடுவர்களின் தப்பு கணக்கு; ஆஸி. பேட் செய்தபோது 4-வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கனிஸ்தான் அணியை தோற்கடித்தது. எனினும், ஒரு ஓவரில் ஆப்கன் அணி 5 பந்துகளை மட்டுமே வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட் செய்த போது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நடுவர்களின் தப்பு கணக்கு என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dSGN2mg