FIFA WC 2022 | ‘‘அதிகபட்சமாக இன்னும் இரண்டு மூன்று வருடங்கள்’’ - ஓய்வு குறித்து பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ

கத்தார்: சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்டத்தின் அனைத்து கால கோல் சாதனையாளரான கிறிஸ்டியானோ ரொனால்டா சமீபத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையின் 700-வது கிளப் கோல் மற்றும் சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களைப் பதிவுசெய்தார். ரொனால்டோ 2016-ம் ஆண்டு யூரோ உலகக் கோப்பையை போர்ச்சுகல் அணியுடன் ஒரு உணர்ச்சிப் பூர்வமானதருணத்தில் வென்றார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் ரொனால்டோவின் சிறந்த முயற்சி 2006ல் அரையிறுதி வரை முன்னேறியது தான். பீலே, மிரோஸ்லாவ் க்ளோஸ், உவே சீலர் ஆகியோரது சாதனையை முறியடித்து ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் கோல் அடிக்கும் முனைப்பில் உள்ளார் ரொனால்டோ.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/714NTMJ