FIFA WC 2022 | கத்தாரில் கால்பந்து திருவிழா தொடங்கியது: 8 மைதானங்கள், 64 போட்டிகள், 29 நாட்கள்

அல் கோர்: கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்கி உள்ளது ஃபிஃபா உலகக் கோப்பை தொடர். இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அந்த நாட்டில் உள்ள 8 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் இன்று முதல் வரும் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான தொடக்க விழாவை தொடர்ந்து முதல் போட்டிக்கான விசில் ஊதப்பட்டது.

முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் அணி, ஈக்குவேடாரை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டி அல் கோர் நகரில் அமைந்துள்ள அல் பைத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கத்தாரில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை தொடர் சிறந்த தொடராக இருக்கும் என ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/1WKQAz3