
துபாய்: கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலியை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரசா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் போன்ற வீரர்களும் இதற்கான பரிந்துரையில் இருந்தனர். ஆனாலும், அவர்களை கோலி முந்தி விருதை வென்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் கோலி மொத்தம் 4 இன்னிங்ஸில் தான் பேட் செய்திருந்தார். அதில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 82 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக எடுத்த 62 ரன்களும் அடங்கும். அதே போல குவாஹாட்டி 28 பந்துகளில் 49 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர் விளாசி இருந்தார். இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 31 ரன்கள் என்ற நிலையில் இருந்த அணியை மீட்டு வெற்றி பெற செய்தார் கோலி. அதோடு இந்தியா இப்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. அதற்கு கோலியின் ஆட்டமும் பிரதான காரணம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதற்காக வாக்களித்து இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/EmDKtLp