ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவின் லவ்லினா 75 கி பிரிவில் தங்கம் வென்று அசத்தல்

அமான்: நடப்பு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை லவ்லினா 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். உஸ்பேகிஸ்தான் நாட்டு வீராங்கனை ரூஸ்மீட்டோவை 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளார். ஆசிய அளவில் அவர் வெல்லும் முதல் பதக்கம் இது. இந்தத் தொடர் ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காக தயாராகி வரும் 75 கிலோ எடைப்பிரிவில் வென்றுள்ள முதல் பதக்கம் இது. இதற்கு முன்னர் அவர் 69 கிலோ பிரிவில் விளையாடி வந்தார். அது பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து கைவிடப்பட்ட காரணத்தால் இந்த எடைப் பிரிவில் விளையாடி வருகிறார் லவ்லினா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/A9bCjvO