
டி20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம், ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்டில் நியூஸிலாந்து அணி தனது மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன், தேவன் கான்வே பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய கான்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் 23 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 12 ரன்களிலும் வெளியேறினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uoBhE2n