T20 WC | பாகிஸ்தானை வென்றால் இந்திய அணியால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியும்: ரெய்னா

எதிர்வரும் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் இந்தியா வென்றால், உலகக் கோப்பையையும் வெல்லும் என தான் நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5J6LSlu