
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தீபக் சஹார் வெளியேறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மாற்றாக இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இணைவார் எனத் தெரிகிறது. மேலும், சிராஜ் மற்றும் ஷமி என இரண்டு பவுலர்களும் இந்திய அணியில் இணையவுள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் வரும் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி முன்னரே அறிவிக்கப்பட்டது. அணியில் இடம்பெற்றிருந்த பிரதான பவுலரான பும்ரா, காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில்தான் சிராஜ், ஷமி மற்றும் தாக்கூர் ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர் என்ற தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/euoatRs