T20 WC வார்ம்-அப் | 2 2 W W W W - கடைசி ஓவரில் சம்பவம்‌ செய்த ஷமி; ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஷமி அசத்தலாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 186 ரன்களை குவித்தது. ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி இருந்தனர். தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ckyICTb