சிறந்த கோல்கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், சவிதா தேர்வு

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த கோல்கீப்பர்களாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், மகளிர் ஹாக்கி அணியின் சவிதா பூனியா ஆகியோர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீஜேஷ் 39.9 புள்ளிகள் பெற்றார். பெல்ஜியத்தின் லோயிக்வான் டோரன் 26.3 புள்ளிகளையும், நெதர்லாந்தின் பிர்மின் பிளாக் 23.2 புள்ளிகளையும் பெற்றனர். இந்த தேர்வுக்கான வாக்கெடுப்பு ஹாக்கி வல்லுநர்கள் (40 சதவீதம்), அணிகள் (20 சதவீதம்), ரசிகர்கள் (20 சதவீதம்) மற்றும் ஊடகங்கள் (20 சதவீதம்) மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CS5BmFg