
செங்குடு: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அணிகள் பிரிவில் இந்திய மகளிர் அணி 0-3 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியமகளிர் அணி கால் இறுதிக்கு முந்தையசுற்றில் நேற்று சீன தைபேவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜா அகுலா, தியாசிட்லே ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். மணிகா பத்ரா 7-11, 9-11, 3-11 என்ற கணக்கில் சென் ஸு யுவிடமும் ஜா அகுலா 8-11, 11-5, 6-11, 9-11 என்ற கணக்கில் ஷிங்கிடமும் தியா சிட்லே 6-11, 11-9, 11-9, 8-11 7-11 என்ற செட் கணக்கில் லியு சிங் யினிடமும் வீழ்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/T8Sq3Dt