கால்பந்தாட்ட கிளப் அணிக்காக 700-வது கோலை பதிவு செய்த ரொனால்டோ

நடப்பு ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட சீசனில் தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார் ரொனால்டோ. அதோடு கிளப் அணிக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகு இது அமைந்துள்ளது. சரியாக கடந்த 20 ஆண்டுகள் 2 தினங்களுக்கு முன்னர் அவர் கிளப் அணிக்காக முதன்முதலில் கோல் பதிவு செய்திருந்தார். அவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியில் விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்தாட்ட உலகிலேயே அதிக கோல்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 37 வயதான அவர் வசம் நிறைய சாதனைகள் உள்ளன. அதோடு பல மைல்கற்களுக்கு அவர் சொந்தக்காரரும் கூட. போர்ச்சுகல் அணிக்காக அவர் மொத்தம் 117 கோல்களை பதிவு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DtIWMuQ