டி20 உலக கோப்பை | சீட்டுக்கட்டாக சரிந்த ஐக்கிய அரபு அமீரக அணி: நெதர்லாந்துக்கு 112 ரன்கள் இலக்கு

மெல்போர்ன்: டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டியின் இரண்டாம் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை சேர்த்தது.

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nJrqeyL