
துபாய்: இந்திய அணியுடனான போட்டிக்கு பிறகு ஹாங்காங் கிரிக்கெட் வீரரான கின்சித் ஷா (Kinchit Shah) தனது தோழியிடம் தனது காதலை மைதானத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். அவரது முயற்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதோடு அவரது தோழி அவரின் காதலை ஏற்றாரா என்பதை பார்ப்போம்.
26 வயதான அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இருந்தும் 18-வது ஓவரில் அவர் அவுட்டனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் ஹாங்காங் அணிக்காக 43 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 633 ரன்கள் எடுத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த 2019 வாக்கில் 79 ரன்கள் சேர்த்திருந்தார். அது டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்களாக உள்ளது. 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QYnDo4t