நியூஸி-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: சஞ்சு சாம்சன் தலைமையில் இந்திய-ஏ அணி அறிவிப்பு

சென்னை: நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய-ஏ அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சஞ்சு சாம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அனைத்து போட்டிகளும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நியூசிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UjI6OtJ