“24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்” - ஓய்வை அறிவித்தார் ரோஜர் ஃபெடரர்

டென்னிஸ் விளையாட்டு உலகத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெகு விரைவில் தொடங்க உள்ள லேவர் கோப்பை (Laver Cup) டென்னிஸ் தொடர்தான் அவரது கடைசி தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. அவருக்கு வயது 41.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரோஜர் ஃபெடரர். கடந்த 1998 வாக்கில் டென்னிஸ் உலகில் அறிமுகமானார். அவர் முதன்முதலில் சர்வதேச அளவிலான தொடரில் விளையாடியது அவரது தாய்நாட்டில்தான். அங்கிருந்து தொடங்கிய அவரது டென்னிஸ் ராக்கெட்டின் (பேட்) அரசாட்சியை யாராலும் அணை போட்டு தடுக்க முடியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Irh5PGs