
புதுடெல்லி: எதிர்வரும் 2025 வரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைப் பொறுப்புகளில் சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2019 முதல் அவர்கள் இருவரும் பிசிசிஐ பொறுப்பை கவனித்து வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் அவர்களது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள சூழலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி அமைப்பான பிசிசிஐ-யை ஒழுங்குபடுத்தும் வகையில் நீதியரசர் ஆர்.எம்.லோத்தா கமிட்டி சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. அதன்படி மூன்று ஆண்டுகள் மாநில கிரிக்கெட் சங்கத்திலும், அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் பிசிசிஐ-லும் என தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயம் சில ஆண்டுகள் இடைவேளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு பதவிக்கு திரும்பலாம் என பரிந்துரைத்தது. அது விதியாகவும் செயல்பாட்டில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/tgkHhno