IND vs ZIM 1st ODI | இந்தியா அசத்தல் பவுலிங்: 189 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் பவுலர்களில் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி இருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக இந்தத் தொடரில் செயல்பட்டு வருகிறார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி அங்குள்ள ஹராரே மைதானத்தில் இன்று தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/cKd36Jn