CWG 2022 | தடகளத்தில் முதல் பதக்கம் - உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர்

பர்மிங்காம்: பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தொடரில் உயரம் தாண்டுதலில் இந்தியா முதல் பதக்கம் வென்றுள்ளது.
இன்று நடந்த ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் 2.22 மீட்டர் தூரம் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர். 23 வயதான இவர் இதன்மூலம் இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கம் பெற்று தந்துள்ளர். இதே பிரிவில், நியூஸிலாந்தின் ஹமிஷ் கெர், 2.25 மீட்டர் தூரம் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/o5hj7wX