“எங்களது முக அழகைப் பார்த்து யாரும் பதக்கம் கொடுக்கவில்லை” - இந்திய லான் பவுல்ஸ் தங்க மகள்கள்

அண்மையில் இங்கிலாந்து நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் இந்திய லான் பவுல்ஸ் மகளிர் நால்வர் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் இந்தs சாதனைக்கு முன்னர் அவர்கள் எதிர்கொண்ட சோதனை மற்றும் விமர்சனங்கள் குறித்து வீராங்கனைகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த விளையாட்டுப் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் அரிதினும் அரிதான இந்த பதக்கத்தை வென்று கொடுத்தனர். நால்வரும் வெவ்வேறு தளங்களில் இயங்கி வருபவர்கள். அவர்களை ஒற்றை புள்ளியில் இணைத்தது அவர்கள் சார்ந்துள்ள விளையாட்டு மட்டுமே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Wie6oZf