
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டுள்ள பிரேசில் மகளிர் அணியைச் சேர்ந்த டெராவோ ஜூலியானா சயோமி கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட்டைப் போன்று எங்கள் நாட்டில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டுக்குள் முடங்கியதால் எங்களது நாட்டில் செஸ் விளையாட்டும் தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்திய மகளிர் அணி, மற்ற அணிகள் அச்சப்படத்தக்க வகையில் வலிமையுடன் உள்ளது. நாங்கள் வெற்றி, தோல்வி என கலவையான முடிவுகளைபெற்று வருகிறோம். அடுத்து வரும் சுற்றுகளில் சிறப்பாக ஆடுவோம். ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை பலமுறை பார்த்துள்ளோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/TIobO3B