44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-வது நாளான நேற்று இந்திய அணியின் ஆதிக்கம் சற்று தளர்ந்தது

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 4-வது நாளான நேற்று இந்திய அணியின் ஆதிக்கம் சற்று தளர்ந்தது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஓபன் பிரிவில் 4-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணியானது பிரான்ஸுடன் மோதியது. வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கார்னெட் மாத்தியூக்கு எதிரான ஆட்டத்தை 30-வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். இதேபோன்று ஹரிகிருஷ்ணா பென்டலா 52-வது நகர்வின் போது மவுஸார்ட் ஜூல்ஸுக்கு எதிரான ஆட்டத்தையும், விதித் குஜராத்தி 31- வது நகர்வின் போது ஃப்ரெசினெட் லாரன்ட்டுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர். எஸ்.எல்.நாராயணனும் 51-வது நகர்வின் போது லகார்டே மோஸ்ட்டுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய ஏ அணி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/KHWrvBp