உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

சாங்வான்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்றது.

கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் அர்ஜூன் பபுதா, சாஹு துஷார் மானே, பார்த் மஹிஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 17-15 கணக்கில் கொரியாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/cpvJ0V9