
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-16, 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் கா-யூனிடம் தோல்வியடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MOLA6tJ