எலோர்டா கோப்பை குத்துச் சண்டை போட்டி - கலைவாணிக்கு வெள்ளிப் பதக்கம்

புதுடெல்லி: கஜகஸ்தானின் நூர்-சுல்தான் நகரில் எலோர்டா கோப்பை குத்துச் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் அல்ஃபியா பதான் 81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் லாசத் குங்கீபயே வாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கிதிகா, சக நாட்டைச் சேர்ந்த கலைவாணி ஸ்ரீனிவாசனை எதிர்த்து விளையாடினார். இதில் கிதிகா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். சென்னையை சேர்ந்த கலைவாணி, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/OSVC6pT