IPL 2022 | 'வெல்டன் பெருசு' பிராவோவிடம் சொன்ன தோனி: ஸ்டம்ப் மைக்கில் பதிவு

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். அது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் பதிவாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போது அந்த அணி தோனி தலைமையில் விளையாடி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான 55-வது லீக் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது சென்னை. இதற்கு அடிப்படை காரணம் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ருதுராஜ், கான்வே என இருவரும் 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QRnmWDf