IPL 2022 | ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து மாயம் செய்த எவின் லூயிஸ்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லக்னோ

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது கடைசி ஓவரில் எவின் லூயிஸ் (Lewis) லாவகமாக பிடித்த ஒற்றைக் கை கேட்ச்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்து விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CEDWGt0