IPL 2022 | நியூஸி. சென்றார் வில்லியம்சன்: கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் யார்?!

மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் அவர் விளையாடாத சூழலில், அவருக்கு மாற்றாக அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

31 வயதான கேன் வில்லியம்சன், நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையிலான ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தனது அணிக்காக இந்த சீசனில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் வில்லியம்சன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/F4b5tuK