
மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிராக 207 ரன்களைக் குவித்துள்ளது டெல்லி அணி. வார்னர், பவல் அசத்தலாக பேட்டிங் செய்தனர்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மிட்சல் மார்ஷ் 10 ரன்களில் அவுட்டானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DHemcIa