IPL 2022 | சென்னை அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

புனே: சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து 173 ரன்கள் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. கோலி, டூப்ளசி, லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதர் அசத்தலாக பேட் செய்தனர்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ceWadHK