விம்பிள்டனில் ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு தடை | "இது அநியாயம்" - நடால், ஜோகோவிச் காட்டம்

மேட்ரிட்: நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட சூழலில், தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் ரஃபேல் நடாலும், ஜோகோவிச்சும்.

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன் டென்னிஸ் தொடர். சுமார் 145 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது. டென்னிஸ் விளையாட்டின் பழமையான தொடர்களில் ஒன்று. கரோனா தொற்று பரவல் காரணமாக 2020 தொடர் கைவிடப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது. இதில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்று விளையாடவுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/iKk7RFt