பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரும்பிய மாற்றத்தை கண்டுள்ளோம் - டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் கருத்து

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது டெல்லி கேபிடல்ஸ் அணி.
160 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் ஷர்துல் தாக்குர் அழுத்தம் கொடுத்து அடுத்தடுத்து இரு விக்கெட்களை வீழ்த்தினார். இதைப் பயன்படுத்தி அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது சுழலால் கூட்டாக 7 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nAIpMsS