வீரர்களை பிரதமர் அழைத்து பேசுவது இந்தியாவில் மட்டுமே நடைபெறும் - பாட்மிண்டன் நட்சத்திரம் ஷிராக் ஷெட்டி பெருமிதம்

பாங்காக்: விளையாட்டில் வெற்றி பெற்றால் பிரதமர் வீரர்களை அழைத்து பேசுவது என்பது இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பாட்மிண்டன் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பாங்காக்கில் சமீபத்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை தோற்கடித்திருந்தது. 1949 முதல் நடத்தப்பட்டு வரும் தாமஸ் கோப்பை தொடரை இந்திய அணி முதன் முறையாக வென்றதால், ஒட்டுமொத்த அணி வீரர்களையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/XfphuMJ