
லண்டன்: அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் மரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்சி ஏலத்தில் உலக சாதனை படைத்துள்ளது. சுமார் 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு அந்த ஜெர்சி விலை போயுள்ளது.
கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுபவர் டியாகோ மரடோனா. கடந்த 2020 நவம்பரில் மறைந்தார் அவர். அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தன் நாட்டுக்காக பதிவு செய்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 34. நான்கு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 1986 உலகக் கோப்பையை வென்றிருந்தது அர்ஜென்டினா. கோப்பை வென்ற அணியின் கேப்டனாக செயல்பட்டவரும் மரடோனா தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/c6g35N8